Skip to main content

பாவேந்தர் பாரதிதாசனின் கனவு நனவாகும் நாள் என்னாளோ


பாவேந்தர் பாரதிதாசன் 
பகுத்தறிவு சிந்தனையாளர் 
மூடப்பழக்க வழக்கங்களில் அறவே வெறுத்தவர் 
அவற்றை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று நினைத்தவர் 
சாதி மதப் பிரிவினைகள் சாடியவர் 
பெண்கள் முன்னேற்றத்தில் முனைப்பு கொண்டவராக இருந்தார் . தமிழர்களையும் தமிழையும் பாடல்களால் உயர்த்தியவர் 
புரட்சியின் மூலம் தான் சமூக மாற்றம் என்ற புரட்சியான கருத்துக்களை தன் பாடல்கள் மூலம் புகுத்தினார் 
பணக்காரர்கள் கையில் ஏழை மக்கள் பகடைக்காய்களாக பயன்படுவதை  கண்டு அன்றே பாடினார் 
பொது உடைமையால் உருவாகும் உலகம் போர் இல்லாத புதிய உலகமாக அமையும். அந்த உலகில் அன்பு நிலைத்து இருக்கும். இது என்னுடையது என்று சேர்க்கும் குறுகிய மனப்பான்மை இல்லாமல் போகும் என்கிறார் பாரதிதாசன்.


புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொதுஉடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம்
புனிதமோடு அதை எங்கள் உயிர் என்று காப்போம்
இதயம் எலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனது என்னும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம்

(பாரதிதாசன் கவிதைகள் 58, புதிய உலகு செய்வோம்)


என்று புதிய உலகு படைக்கப் பாடியுள்ளார் பாரதிதாசன்.

புதிய புதிய பொருள்கள் பல படைக்க வேண்டும். அந்தப் பொருள்கள் அனைத்தும் பொதுநலத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற உயர்ந்த கருத்தைப் பாரதிதாசன்,


புதுவினை செய்க அஃது
பொதுநலம் ஆதல் வேண்டும்
இதுசெய்க போர்கள் இல்லை
இன்ப நல்லுலகைக் காண்பாய்


என்று பாடியுள்ளார். இப்படிப்பட்ட தன்மை உலகில் மலர வேண்டும். அவ்வாறு மலர்ந்தால் இன்ப உலகமாக இருக்கும் என்றார் .

மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் எந்த சூழ்நிலையிலும்
 ஏழை பணக்கார பாகுபாட்டையும் ஆண்டான் அடிமை வேறுபாட்டையும் கடந்து ஒரு பொதுவுடமை சமுதாயம் அமைத்து அதை நாம் உயிர் என எண்ணி காக்க வேண்டும் என்றார் பாரதிதாசன் 
அதேபோல் நாட்டில் சாதி மத பேதம் எல்லாம் ஒரு சிலர் அவர்களுடைய வாழ்க்கையில் நல்ல முறையில் அமைத்துக் கொள்ள மக்களை பிரித்து வைப்பதற்கு செய்த சூழ்ச்சி என்ற உண்மையை முதலில் உரைத்தவர் பாவேந்தர்
அந்த சூழ்ச்சியில் சிக்கி அவதிப்படும் மக்களைப் பார்த்து தீண்டாமை என்ற கொடிய வழக்கம் தமிழகத்தின் முன்னேற்றத்தை வெறும் கனவாக்கிக் கொண்டிருந்தது. சாதி நம் பண்பாட்டுக்கு முரண் என்று கூறிய பாரதிதாசன் சாதி இருக்கின்றது என்று கூறுவோன் இன்னும் உயிர் வாழ்கின்றானே என்று துடிக்கின்றார்.

 'சாதி என்ற சொல்லே தமிழுக்கு உரியதில்லை, பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் சாதிப் பிரிவுகள் பழந்தமிழகத்தில் இல்லை.



சாதி மதம் தமிழ் இல்லை - அந்தச்    
சாதி மதத்தைத் தமிழ்கொள்வ தில்லை.


இருட்டறையில் உள்ளதடா உலகம்! சாதி    
இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே!


என்று அவர் பாடுகின்றார். சாதிகளை ஒழிப்பதற்குக் கவிஞர் கொடுத்த குரல் தமிழ் நாடெங்கும் பரவியது. அவர் அச்சமின்றிச் சாதிகளைச் சாடினார்; வாழ்நாள் முழுதும் சாதி ஒழிப்புப் போர் நிகழ்த்தினார். சாதி    


இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே என்று துடித்தார் .



 இப்படி 40 ஆயிரம் வரிகளால்  தமிழ் பாடல்கள் பாடி தமிழுக்குப் பெருமை சேர்த்த பாவேந்தர் பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார்

இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம் ஆகும்.சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.



தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார் அந்தக் காலத்தில் பட்டிக்காடு என்று சொல்வார்களே அதே மாதிரியான சிறிய கிராமம் கூனிச்சம்பட்டு திருமணமாகாத இளைஞர் பாரதிதாசன் அதே கிராமத்தில் உள்ள பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார் அந்த கிராமத்தில் நிலக்கிழார் வீட்டைத் தவிர வேறெங்கும் உணவு கிடைக்காது அந்த ஊரில் ஹோட்டலும் இல்லை பாரதிதாசன் மக்களின் கையை எதிர்பார்த்து இருப்பது அவருக்கு வழக்கமும் இல்லை. ஊரில் உள்ள சிறிய பெட்டிக் கடை ஒன்றில் ஆறு காசு கொடுத்து 15ரொட்டிகளை  வாங்கிக்கொண்டு கோவில் குளத்தில் உள்ள படித்துறையில் துண்டை விரித்து உட்கார்ந்து நாலைந்து சாப்பிடடு  வானத்தைப் பார்த்தவாறு படுத்துவிடுவார் மாலைப் பொழுதில் வீசும் தென்றல் பறவைகளின் ஒலிகள் போன்றவற்றை  கேட்டுவிட்டு மீதியையும்   சாப்பிட்டுவிட்டு குளிர்ந்த நீரை குடித்துவிட்டு  புறப்பட்டு விடுவார் இவ்வாறு எளிமையான ஆசிரியர் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த பாவேந்தரை ஆய்வுக்கு வந்த அதிகாரி பாவேந்தர் இடம் சுப்புரத்தினம் இந்த கிராமத்தில் உன்னை பணியாற்ற வைப்பது கஷ்டமாகத்தான் உள்ளது என்று பரிவுடன் கூறிய கல்வி அதிகாரியை பார்த்து இதை விட வசதி குறைவான கிராமம் ஒன்றும் இல்லை எனவே தான் என்னை இந்த கிராமத்தில் பணி அமைத்து விட்டீர்கள் என்றார் இதைக் கேட்ட கல்வி அதிகாரியின் முகம் மாறியது அப்போது அவர்  இந்த பள்ளியில் உன்னை ஆசிரியராக தொடரவைப்பது  நாங்கள் செய்யும் பெரும் தவறு என்று தெரிகிறது எனவே உன்னை புதுச்சேரிக்கு மாற்ற ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி விட்டு புறப்பட்டார் சொன்னபடியே அடுத்த சில நாட்களில் மாற்றப்பட்டார்.
கவிஞரின் ஆசிரியப்பணி 38 ஆண்டுகள் அதில் 30 பணி மாற்றங்கள் 1920 ஆம் ஆண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்து வந்த நேரத்தில் பழனி அம்மாள் என்ற பெண்மணியை மணக்கிறார் பாரதிதாசன் அந்த தம்பதியருக்கு ஒரு மகனும் மூன்று மகளும் பிறந்தனர் 
பாரதிதாசன் பாடல்களில் காணலாம் தமிழின் அழகை 


தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்



எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!


 தமிழுக்காகவே தமிழ் கவிதை பாடிய தமிழ்ப் புலவன் பாரதிதாசன்
தமிழ் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வளர்ச்சி உடையது என்றால் அதற்கு காரணம் சங்ககாலப் புலவர்களில் இன்னும் தொடர்ந்து வாழப் போகின்ற தமிழ் சந்ததியினருக்கு தமிழ் உணர்ச்சியையும் வீரத்தையும் ஊட்டும் தேன் கனி சேர பாரதிதாசன் பாடல்கள் அமைந்துள்ளன
தமிழ் வரலாற்றில் பாரதிதாசனுக்கு ஒரு நிலையான இடம் உண்டு 
தமிழக்கு பெரும் தொண்டாற்றிய பாவேந்தர் தனது 73 - ம் வயதில்,  21. 04. 1964 ஆண்டு காலமானார்.
தமிழுக்காக வாழ்ந்து மறைந்த தமிழ்ப் புலவரின் பாடல்கள் தமிழ் வரலாற்றில் நிரந்தரமான  வாழ்வுண்டு
விடுதலை இயக்கம் தந்த வெண்ணிலா பாரதி என்றால் 
சீர்திருத்த உலகம் தந்த சென்றவர் பாவேந்தர் பாரதிதாசன் 
பாரதிதாசனின்  கனவு நனவாகும் நாள் என்னாளோ 
பாவேந்தரும் பாவேந்தர் பாரதிதாசன் 



Comments

Popular posts from this blog

கம்பன்

குரங்கு ஏற்றுக்கொள்ளாத கொம்பு எந்த மரக்கிளையும் குரங்கு ஏற்றுக் கொள்ள ஆயத்தமாக இருப்பது போல எந்த அரசனும் என்னை ஏற்றுக் கொள்வான் என காலத்துடன் உறங்கிய பாடல் இது நீ மட்டும் தான் மன்னவனே உன் நாடு மட்டும் தான் இவ்வுலகில் உள்ளதா பரந்து விரிந்த ஆழிசூழ் உலகில் என்னை ஏற்றுக் கொள்ளாத மன்னன் இருக்க முடியுமா என்று முழங்கிய கம்பர் சோழ மன்னன் தன்னை அவமதித்த பை மரியாதை குறைவாய் பேசியதை நடத்தியதை பொறுத்துக் கொள்ளாமல் கேட்கிறார் மன்னவனும் நீயோ என்று கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு அல்லவா எங்கு சென்றாலும் உலகம் மதிக்கும் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் கல்வி மட்டுமல்ல கற்றுக்கொள்ளும் தொழிலும் கூட வாழ்வின் இலக்கும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதும் உண்மை கருத்தாழமிக்க பாடல்கள் மற்றும் செயல்பாடுகள் எண்ணிலடங்கா செங்கோல் எழுதுகோல் என்றும் வாழும் மன்னவனும் நீயோ வளநாடும் நின்றதுவும் உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் என்று சினந்து சொல்லி மன்னன் பதிலையும் மறுமொழியும் கூட எதிர்பார்க்காமல் மேலேறி பிரிட்டனில் இருந்து வெளியேறிய கம்ப நாட்டார் சுயமரியாதை எவ்வளவு சிறப்புடைத்து நமக்குள்ளும் இத்...

🏰 நியுஷ்வான்ஸ்டெயின் கோட்டை (Neuschwanstein Castle) – ஜெர்மனியின் அழகிய கற்பனை அரண்மனை

  🏰 நியுஷ்வான்ஸ்டெயின் கோட்டை (Neuschwanstein Castle) – ஜெர்மனியின் அழகிய கற்பனை அரண்மனை Meta Description (SEO): ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் அமைந்துள்ள நியுஷ்வான்ஸ்டெயின் கோட்டை (Neuschwanstein Castle) உலகின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று. லூட்விக் II மன்னர் கட்டிய இந்த அரண்மனை, டிஸ்னியின் Sleeping Beauty Castle க்கு ஊக்கமாக அமைந்தது. 📍 நியுஷ்வான்ஸ்டெயின் கோட்டை எங்கு அமைந்துள்ளது? நியுஷ்வான்ஸ்டெயின் கோட்டை ஜெர்மனியின் பவேரியா (Bavaria) மாநிலத்தில் , ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இயற்கையின் மடியில் பசுமையான பள்ளத்தாக்குகள், ஏரிகள், மலைகளால் சூழப்பட்டு இருக்கும் இக்கோட்டை, புகைப்படக்காரர்களும் சுற்றுலா பயணிகளும் தவறாமல் பார்வையிடும் இடமாகும். 🏰 வரலாறு மற்றும் கட்டுமானம் கட்டியவர்: பவேரியாவின் லூட்விக் II மன்னர் கட்டுமானம் தொடங்கியது: 1869 கட்டிடக்கலை: Romanesque Revival பாணி இந்த அரண்மனை முழுமையாக முடிக்கப்படாத போதிலும், உலகின் மிக அழகான கோட்டைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ✨ சிறப்பம்சங்கள் வால்ட் டிஸ்னியின் Sleeping Beauty Castle க்க...