- தமிழ்க் காப்பியமான காதம்பரி இரண்டு பகுதிகளாக உள்ளது. முதல்
பகுதிக்குப் ‘பூர்வ காதம்பரி’ என்பது பெயர். இதனைப் ‘பட்டபாண கவி’ என்பவர்
இயற்றினார். இவரை ‘ஆதிவராக கவி’ என நூலின் பாயிரப்பகுதியிலுள்ள பாடல்
குறிப்பிடுகிறது. இரண்டாம் பாகத்தின் பெயர் ‘உத்தர காதம்பரி’. இதனை அவரது
மகன் இயற்றினார்.
ஆதிவராக கவியின் தந்தை அருளாளர் என்னும் அந்தணர். பொருளாகரன் என்பவரின் தம்பி. இவர்கள் சோழநாட்டில் வாழ்ந்தவர்கள்.
நூல் செய்த காலம் கி.பி. 1411 திருமால், சிவன், கலைமகள், வேழமுகவன், முருகன் ஆகிய வழிபாட்டுப் பாடல்களுக்குப் பின் நூல் விரிகிறது.
இவர் காதம்பரி வரலாற்றைச் சுருக்கமாகத் தந்துள்ளதை அவரே குறிப்பிடுகிறார். - பாற்கடல் சென்ற பூசை பாலின்மேல் ஆசை வைத்து
- மேற்கொள வரினுப் எல்லா வெள்ளமும் கொள்ள வற்றோ
- பாற்கடல் அன்ன காதம் பரிக்கடல் பரப்பில் ஆசை
- மேற்கொளும் என்றன் நெஞ்சம் வேண்டுவ கொள்ளும் அன்றே.
பாவேந்தர் பாரதிதாசன் பகுத்தறிவு சிந்தனையாளர் மூடப்பழக்க வழக்கங்களில் அறவே வெறுத்தவர் அவற்றை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று நினைத்தவர் சாதி மதப் பிரிவினைகள் சாடியவர் பெண்கள் முன்னேற்றத்தில் முனைப்பு கொண்டவராக இருந்தார் . தமிழர்களையும் தமிழையும் பாடல்களால் உயர்த்தியவர் புரட்சியின் மூலம் தான் சமூக மாற்றம் என்ற புரட்சியான கருத்துக்களை தன் பாடல்கள் மூலம் புகுத்தினார் பணக்காரர்கள் கையில் ஏழை மக்கள் பகடைக்காய்களாக பயன்படுவதை கண்டு அன்றே பாடினார் பொது உடைமையால் உருவாகும் உலகம் போர் இல்லாத புதிய உலகமாக அமையும் . அந்த உலகில் அன்பு நிலைத்து இருக்கும் . இது என்னுடையது என்று சேர்க்கும் குறுகிய மனப்பான்மை இல்லாமல் போகும் என்கிறார் பாரதிதாசன் . புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் பொதுஉடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம் புனிதமோடு அதை எங்கள் உயிர் என்று காப்போம் இதயம் எலாம் அன்பு நதியினில்...
Comments
Post a Comment