Skip to main content

Posts

Showing posts from 2017

தமிழ் காதம்பரி

தமிழ்க் காப்பியமான காதம்பரி இரண்டு பகுதிகளாக உள்ளது. முதல் பகுதிக்குப் ‘பூர்வ காதம்பரி’ என்பது பெயர். இதனைப் ‘பட்டபாண கவி’ என்பவர் இயற்றினார். இவரை ‘ஆதிவராக கவி’ என நூலின் பாயிரப்பகுதியிலுள்ள பாடல் குறிப்பிடுகிறது. இரண்டாம் பாகத்தின் பெயர் ‘உத்தர காதம்பரி’. இதனை அவரது மகன் இயற்றினார். ஆதிவராக கவியின் தந்தை அருளாளர் என்னும் அந்தணர். பொருளாகரன் என்பவரின் தம்பி. இவர்கள் சோழநாட்டில் வாழ்ந்தவர்கள். நூல் செய்த காலம் கி.பி. 1411  திருமால், சிவன், கலைமகள், வேழமுகவன், முருகன் ஆகிய வழிபாட்டுப் பாடல்களுக்குப் பின் நூல் விரிகிறது. இவர் காதம்பரி வரலாற்றைச் சுருக்கமாகத் தந்துள்ளதை அவரே குறிப்பிடுகிறார். பாற்கடல் சென்ற பூசை பாலின்மேல் ஆசை வைத்து மேற்கொள வரினுப் எல்லா வெள்ளமும் கொள்ள வற்றோ பாற்கடல் அன்ன காதம் பரிக்கடல் பரப்பில் ஆசை மேற்கொளும் என்றன் நெஞ்சம் வேண்டுவ கொள்ளும் அன்றே.